“சோகத்தின் உச்சம்” நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை.. இந்தியத் தூதரகம் முக்கிய எச்சரிக்கை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சோகத்தின் உச்சம்” நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை.. இந்தியத் தூதரகம் முக்கிய எச்சரிக்கை…!!

Published

on

கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிருடனோ அல்லது சடலமாகவோ இதுவரை கண்டறியப்படாத 213 இந்தியர்களை இறந்தவர்களாக அறிவிக்கும் நடைமுறையை நேபாள அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பெருவெள்ளத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், வெளிநாட்டினர் உட்பட 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 நாடுகளின் தூதரகங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட 452 காணாமல் போன வெளிநாட்டினரின் விவரங்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

நேபாளத்தின் தேசிய பேரிடர் மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள காணாமல் போன 213 இந்தியர்களின் பட்டியலைக் குடும்பத்தினர் பரிசீலிக்க வேண்டும் என்று காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள், சேர்ப்புகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +9779851316807 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

ஆட்சேபனைகள் மற்றும் திருத்தக் கோரிக்கைகள் பெறப்பட்ட பிறகு, நேபாள அரசு இறுதிப் பட்டியலைத் தயாரித்து காணாமல் போனவர்களை அதிகாரப்பூர்வமாக இறந்தவர்களாக அறிவிக்கும். அதைத் தொடர்ந்து, நேபாளத்தின் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து உரிய இறப்புச் சான்றிதழ்களைப் பெறும் பணிகள் தொடங்கப்படும் என்றும், இதற்காகக் குடும்பத்தினரிடமிருந்து கூடுதல் ஆவணங்களும் தகவல்களும் கோரப்படலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in