CINEMA
“எனக்கு 2 உடல்நலப் பிரச்சினை இருக்கு.. ஆனா.. மனம் திறந்து உண்மையைப் போட்டுடைத்த ‘தங்கலான்’ நடிகை பார்வதி..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வரும் பார்வதி திருவோத்து, தனக்கு ADHD எனப்படும் கவனக்குறைவு மற்றும் அதிவேக செயல்பாடு / சுறுசிறுப்புக் குறைபாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கேரளாவில் பிறந்து மலையாள சினிமா மூலம் பிரபலமான இவர், தமிழில் பூ, மர்யான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்; மேலும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பேசிய பார்வதி, தனக்கு ADHD பாதிப்பு இருக்கிறது. ஆனால் நான் அதைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை என்றும், தன்னைப் பொறுத்தவரை காலம் மற்றவர்களைப் போலன்றி நெகிழ்வுத்தன்மை கொண்டதாகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குக் கடுமையாக உழைப்பேன் என்றும், தான் செய்த கடின உழைப்புக்குப் பிரபஞ்சம் தன் ஆசீர்வாதத்தைத் திருப்பி வழங்கியிருப்பதாகவும், தனக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
