மனைவியின் ஊனத்தை கேலி செய்த ரவுடி பேபி சூர்யா….! வறுத்தெடுத்த ஜி. பி. முத்து….. தற்போது வைரலாகும் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியின் ஊனத்தை கேலி செய்த ரவுடி பேபி சூர்யா….! வறுத்தெடுத்த ஜி. பி. முத்து….. தற்போது வைரலாகும் வீடியோ….!!!

Published

on

ஜி.பி. முத்து அவர்கள் ரவுடி பேபி சூர்யாவை தாறுமாறாக திட்டும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்கள் கடந்து விட்டது. இந்த  நிகழ்ச்சியில் 10 ஆண்கள் 10 பெண்கள் ஒரு திருநங்கை என்று 21 பேர் கலந்து கொண்டுள்ளனர். youtube மூலமாக பிரபலமானவர் ஜி. பி. முத்து இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜி. பி. முத்து அவர்கள் பிக் பாஸ் செல்வதற்கு முன்பாக பல வீடியோக்கள் பேசியிருப்பார். இந்நிலையில் அதில் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது ரவுடி பேபி சூர்யா உனக்கு இந்த பொண்டாட்டி இருக்கும்போதே இந்த ஆட்டம் ஆடுற இன்னும் நல்ல பொண்டாட்டி கிடைத்திருந்தா உன்னை எல்லாம் கையில பிடிக்க முடியாது என்று அவரின் மனைவியின் குறையை பற்றி பேசி இருப்பார்.

Advertisement

இதனால் ஆத்திரம் அடைந்த ஜி.பி. முத்து நீ என்னை பற்றி எதுவேனாலும் பேசு என் மனைவியை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை. அது மட்டும் இல்லாமல் ஊனம் என்பது ஒரு குறை இல்லை என் மனைவியை ஊனம் என்று பார்த்து காதலித்து நான் திருமணம் செய்து கொண்டேன் . ஊனமாய் இருப்பவர்கள் நல்லவர்கள் இல்லை என்று  சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று ரவுடி பேபி சூர்யாவை அவரது ஸ்லாங்கில் வறுத்தெடுத்திருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in