LATEST NEWS
கௌதம் கார்த்திக் – மஞ்சிமா தம்பதிக்கு திருமண வாழ்த்து…. வேற லெவலில் சூப்பர் கிப்ட் கொடுத்து அசத்திய நயன் – விக்கி…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் அண்மையில்கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி இருவருக்கும் சென்னையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
புதுமண தம்பதிக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் மணமக்கள் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு கேக் ஒன்றை பரிசளித்து அந்த வாழ்த்துச் செய்தியில், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்க வாழ்த்துக்கள் என அவர்கள் கூறியுள்ள நிலையில் அதனை மஞ்சுமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
