LATEST NEWS
புத்தாண்டில் சாலையோர மக்களுக்கு உதவிய நயன் – விக்கி…. பலரின் பாராட்டுக்களை பெறும் வீடியோ (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் இன்று அறியப்படும் நயன்தாரா. இவரின் நடிப்பில் அண்மையில் கணக்கு என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பல புகைப்படங்களை வெளியிட்ட இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தை பெற்றிருப்பதாக திடீரென அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மறுபக்கம் சர்ச்சையும் கிளம்பிய நிலையில் 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் விளக்கம் அளித்த நிலையில் சர்ச்சை முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு அவர்கள் மக்களுக்கு செய்த உதவி குறித்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
