LATEST NEWS
இவ்வளவு மோசமானவரா.. ‘நடிகர் பிரகாஷ் ராஜ்’…! 5 ரூபாய் கோடி அபேஸ்…? “கோர்ட் போட்ட கிடுக்கு பிடி”…. அம்பலமான உண்மை..?
கடந்த 2014ம் ஆண்டு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்கி வெளியான படம் “உன் சமையல் அறையில் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை வாங்கியது.
இதேபடத்தை, பாலிவுட்டில் தடிகா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் அந்த படத்தை தயாரிக்க, பைனான்சியர் ஒருவரிடம் இருந்து 5 கோடி கடனாக பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பெருநகர 3வது விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாலிவுட் பட பைனான்சியர் ஒருவர் செக் மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். வழக்கில், தடிகா இந்தி படத்தை ரீமேக் பண்ண நடிகர் பிரகாஷ்ராஜ் ரூ.5 கோடி கடன் வாங்கியதற்கு ஈடாக ப்ளாங் செக் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த செக் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி விட்டன என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.
