“37 வருட திருமண பந்தம்”….. அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த பாண்டியராஜன் மகன்…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“37 வருட திருமண பந்தம்”….. அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த பாண்டியராஜன் மகன்…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் பாண்டியராஜன்.

இவரை புதுமைகளை மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.

Advertisement

தன்னுடைய இளம் வயதிலேயே கலை துறையின் மேல் ஈடுபாடு அதிகம் இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் தோற்றம் மற்றும் உயரம் எதுவும் முக்கியமில்லை என்று நிரூபித்து காட்டிய கலைஞர் இவர்தான்.

Advertisement

இவருடைய பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக இவரின் பார்வையே பலரையும் வெகுவாக கவரும். பாண்டியராஜன் என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது அவரின் திருட்டு மொழி மற்றும் வெள்ளந்தியான பேச்சு தான்.

Advertisement

தன்னுடைய 23 வயதில் சினிமா உலகில் இயக்குனராக பிரபலமானவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார்.

கன்னி ராசி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஆண் பாவம், மனைவி ரெடி மற்றும் கபடி கபடி போன்ற 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

Advertisement

இப்படி சினிமா துறையில் பல சாதனைகளைப் படைத்து கொடிகட்டி பறந்த இவர் சினிமாவில் இருந்து சற்று பிரேக் எடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இதனிடையே பாண்டியராஜன் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் பாண்டியராஜன் மகன் பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தனது அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

37 ஆவது திருமண நாளை பாண்டியராஜன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in