திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத் பாபு…. என்ன ஆச்சு?…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத் பாபு…. என்ன ஆச்சு?…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்த நடிகர் தான் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு 1977 ஆம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சரியாக அந்த திரைப்படங்கள் இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதனால் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ள சரத் பாபு இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

71 வயதாகும் இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in