LATEST NEWS
மாஜி கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு…. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா….????
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார். இவரின் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படத்தை சமந்தா இணையத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமந்தா தனது மாஜி கணவருடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இறுதியாக இருவரும் நடித்த திரைப்படம் தான் மஜ்லி.
இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் நான்கு வருடங்களை தற்போது நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சமந்தா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#4YearsofMajili ♥️ https://t.co/uWcftyByex
— Samantha (@Samanthaprabhu2) April 5, 2023
