LATEST NEWS
அடடே கம்பம் மீனாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?…. மருமகளுக்கு வளைகாப்பு நடத்திய அழகிய புகைப்படங்கள்….!!
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.
அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
தற்போது துணை நடிகையாக இருக்கும் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.தன்னுடைய குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்ட் ஆக கம்பம் மீனா பணியாற்றியுள்ளார்.
மிகவும் தைரியமான பெண்ணாக வளம் வந்த இவர் அப்போதே தன்னுடைய சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெண்ணாக இருந்து வந்துள்ளார். அதன் பிறகு பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் இவரை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார்.
இவர் கிராமத்து வழக்கு முறையில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதேசமயம் தெற்கத்தி பொண்ணு சீரியல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது.
அதன் பிறகு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி மற்றும் சகுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள.
மேலும் மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தில் இயக்குனர் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டை சுழி திரைப்படத்தில் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே மருமகளாக நடித்த அசத்தினார்.
சிறுவயதில் தந்தையை இழந்து திருமணம் என்றாலும் தன்னுடைய வாழ்வில் பல தடைகளைக் கடந்து இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகனுக்கு திருமணம் முடிந்து தற்போது மருமகளுக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு விழா நடத்திய புகைப்படங்களை கம்பம் மீனா பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனைப் பார்த்த பலரும் கம்பம் மீனாவுக்கு இவ்வளவு பெரிய மகனா எனக் கூறி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
