LATEST NEWS
“யாரு டா தம்பி நீ?.. நூற்றுக்கணக்கான உயிர்களோடு விளையாடும் சிறுவன்.. தண்டவாளத்தில் நடந்த அதிர்ச்சி வீடியோ”..!!
மனிதர்களின் அஜாக்கிரதையும் குறும்புத்தனமும் எந்த அளவிற்கு விபரீதமாக மாறும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சான்று. இந்த சிறுவன் செய்யும் காரியம் ஏதேனும் தவறாக முடிந்திருந்தால், அது நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிரைப் பறித்திருக்கும். தண்டவாளங்களை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பிடிக்கும் இரும்பு கிளம்புகளை அந்தச் சிறுவன் தண்டவாளத்தின் மீது அமர்ந்து கொண்டு, மிகச் சாதாரணமாக நெம்பி கழற்றிக் கொண்டிருக்கிறான்.
देखिए लोग कितना बड़ा खिलवाड़ करते हैं 😡
ये बच्चा जो कर रहा है अगर कुछ हो जाता तो बहुत लोगों का जान जा सकता है 😡।
ये Railway के Track पर बैठकर बहुत सारे लोहे की Clam खोल रहा है जो क्लेम ट्रैक को जोड़ता है।
सोचिए अगर कुछ हो जाता ट्रेन का इस लापरवाही की वजह से तो कितना बड़ा… pic.twitter.com/9eFFgLe3EI— Subhajit Das (@SantaniSubhajit) July 19, 2026
இரயில்வே தண்டவாளத்தில் காட்டப்படும் இந்த அலட்சியத்தால் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டிருந்தால், அது ஒரு மிகப்பெரிய இரயில் விபத்திற்கு வழிவகுத்திருக்கும். பார்ப்பவர்களை நெஞ்சை பதறவைக்கும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவரால் பகிரப்பட்டுள்ளது; ஆனால், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றிய விபரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
