LATEST NEWS
BREAKING: செந்தில் பாலாஜிக்கு நீதிபதி வைத்த செக்!.. உயர்நீதிமன்றம் அளித்த அதிரடித் தீர்ப்பு.. ஷாக்கில் திமுக வட்டாரம்..!!
ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை தேவையின்றி துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்றும் கோரி செந்தில்பாலாஜியும் அவரது தம்பி அசோக் குமாரும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக, இந்த ஆட்சி கவிழ்ப்பு பேர வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி ஏற்கெனவே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
