CINEMA
“மனித கடவுள் பாலா அண்ணா” லாரியில் ரசிகர் செய்த காரியம்…. இணையத்தில் செம வைரல்…!!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா. ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில சேவையே கடவுள் என்ற வாசகத்துடன் kpy பாலாவின் புகைப்படத்தை லாரியில் வரைந்துள்ளதை பாலாவின் ரசிகர் பதிவிட்டு “மனித கடவுள் பாலா அண்ணா” என்று பதிவிட்டுள்ளார்.