LATEST NEWS
“நாசா விஞ்ஞானி டூ ஐபிஎஸ் ஆபீசர்..” 14 வயது சிறுமிக்காக அமெரிக்க வேலையைத் தூக்கி எறிந்த சிங்கப்பெண்.. யார் இந்த அனுகிருதி சர்மா..? நெகிழ்ச்சி பின்னணி..!!
அமெரிக்காவில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவோடு நாசா வரை சென்று ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அனுகிருதி சர்மா, தேநீர் விற்பனையாளரின் 14 வயது மகளுக்கு நேர்ந்த ஒரு கொடூரச் சம்பவத்தைக் கண்டு தனது வாழ்க்கையின் லட்சியத்தையே மாற்றியுள்ளார். அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி அவரது மனசாட்சியை உலுக்கியதால், அமெரிக்காவில் இருந்த தனது பிரகாசமான அறிவியல் வாழ்க்கையைத் துறந்துவிட்டு அவர் இந்தியா திரும்பினார். காவல்துறை அதிகாரியாக மாறி சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஆரம்பத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரான அவர், மூன்று முறை தோல்வியைத் தழுவிய போதிலும் சற்றும் மனந்தளராமல் போராடி ஐபிஎஸ் அதிகாரியாக சாதனை படைத்தார்.
தற்போது 12 மாநிலங்களில் பரவியிருந்த சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா காப்பீட்டு மோசடியை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியதற்காக, அனுகிருதி சர்மாவிற்கு மத்திய உள்துறை அமைச்சரின் ‘திறமைக்கான பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியை விட, இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களின் நீதிக்காகப் போராடுவதே தனது வாழ்வின் உண்மையான நோக்கம் என்று நிரூபித்துக் காட்டியுள்ள இந்த சிங்கப் பெண்ணின் அசாத்தியமான போராட்டமும் வெற்றியும், ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கும் ஒரு மாபெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.
