CRIME
உச்சகட்ட கொடூரம்!.. 14 வயது சிறுமியின் வழக்கை விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த 2-வது பேரதிர்ச்சி.. குடும்பத்திற்குள்ளேயே நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, 15 வயதே ஆன சிறுமி ஒருவர் ஒரே வருடத்திற்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பழைய ஹுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமி பாதிக்கப்பட்ட மற்றொரு போக்சோ வழக்கு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் போதே, பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த 15 வயது சிறுமியும் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் சகோதரிகளின் மகள்கள் என்பதும், இந்த கொடூர சம்பவங்கள் குடும்பத்திற்குள்ளேயே நடந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ரயில் நிலையம் அருகே அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்தச் சிறுமி, ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த முதல் குழந்தை உடல்நலக் குறைவால் கார்வாரில் உள்ள உறவினர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் கூறினாலும், குழந்தையை அடையாளம் தெரியாத நபரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த மே மாதம் அதே நபர் மீண்டும் நிகழ்த்திய பாலியல் அத்துமீறலால் அச்சிறுமி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். தற்போது இரு சிறுமிகளும் மருத்துவக் கண்காணிப்பில் பாதுகாப்பாக உள்ள நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருப்பதால் உடல்நலம் தேறிய பிறகே விரிவான வாக்குமூலம் பெறப்படும் என ஹுப்பள்ளி-தார்வாட் காவல் ஆணையர் என். சசி குமார் தெரிவித்துள்ளார். இந்த இரட்டை கர்ப்பச் சூழல், முதல் குழந்தையின் தற்போதைய உண்மை நிலை மற்றும் இதற்குப் பின்னணியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் தொடர்பு ஆகிய பல்வேறு கோணங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் தனித்தனி வழக்குகளாகப் பதிவு செய்து கர்நாடக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
