“ஒரே ஜாடையில் இருந்ததால மாத்தி வெட்டிட்டோம்”.. பாரில் மது அருந்திய கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்.. கொலையாளிகளின் பகீர் வாக்குமூலம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரே ஜாடையில் இருந்ததால மாத்தி வெட்டிட்டோம்”.. பாரில் மது அருந்திய கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்.. கொலையாளிகளின் பகீர் வாக்குமூலம்..!!!

Published

on

கிருஷ்ணகிரி அருகே தனியார் பாரில் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளரான முகேஷ் (36) என்பவரை, முன்விரோதம் காரணமாக ஆள் மாறி கழுத்தில் கத்தியால் வெட்டிய கொடூர சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி சப் ஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்த முகேஷ், டவுன் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் ரமேஷ்குமாருடன் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தனியார் பாருக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது இவர்களுக்கு அருகில் இருந்த மேசையில் சத்யசாய் நகரைச் சேர்ந்த நித்தீஷ், ஜக்கப்பன் நகரைச் சேர்ந்த மஞ்சு, குப்பண்ணா நகரைச் சேர்ந்த சூர்யா உள்ளிட்ட 6 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். முகேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், அந்த கும்பல் திடீரென முகேஷின் கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த முகேஷ் மீட்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த சூர்யா, பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மற்றொரு சூர்யா ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த கும்பல் தங்களது எதிரி என நினைத்து, அதே தோற்றத்தில் இருந்த முகேஷை ஆள் மாறி வெட்டியது தெரியவந்துள்ளது. இக்கொலையுதிர் தாக்குதலில் தொடர்புடைய கவின், நித்தீஷ், மஞ்சு ஆகிய தலைமறைவான 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in