LATEST NEWS
திரும்பி வந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்….! ஆனால் அவங்க சம்மதமும் வேண்டும்..! திவ்யா உருக்கம்…..!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா. இந்த சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு தற்போது திவ்யா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் செல்லமாவாக நடித்து வரும் நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி மாறி, மாறி சண்டை போட்டு வந்தனர்.
இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த தன்னை அர்னவ் தாக்கியதாக கூறி ,சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . மேலும் வழக்கில் நடிகர் அர்னவை விசாரணைக்கு ஆஜராகம்படி தெரிவித்திருந்தனர் .
ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்ததால் படப்பிடிப்பு தளத்தில் சென்று காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அவரை வரும் 28ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகை திவ்யா அளித்துள்ள பேட்டியில் அர்னவ் திரும்பி வந்தால் நான் ஏற்றுக்கொள்வேன் .ஆனால் அதை அர்னவின் பெற்றோர்கள் வந்து கூற வேண்டும். ஏனென்றால் அவர் பெற்றோர் பெயரை சொல்லி தான் என்னை தவிர்த்தார். அவர் என்னுடன் வாழ்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது. அது மாதிரி வீட்டில் நடந்து கொள்ள வேண்டும். அவர் வீட்டில் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் உள்ளார். அவர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. எல்லாம் பொய் என்று அவர் கூறியிருந்தார்.