LATEST NEWS
பிச்சைக்காரரை போல் இருக்கும் தனுஷ்.. 51-வது பட ஷூட்டிங்கில் சிக்கல்.. முதல் நாளே இப்படியா..? வைரலாகும் வீடியோ..!!

நடிகர் தனுஷ் இயக்குனர் பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் தனது 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். அடுத்ததாக தனுஷின் 51 வது படத்தை இயக்குனர் சேகர் கமுலா இயக்குகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்காலிகமாக இந்த படத்திற்கு டி.என்.எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ் 51-வது படத்திற்கான ஷூட்டிங் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் பகுதியில் நேற்று காலை தொடங்கியது.
படப்பிடிப்பு நடந்ததால் போலீசார் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தனுஷின் படத்திற்கு திருப்பதியில் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும் நடிகர் தனுஷ் பார்ப்பதற்கு பிச்சைக்காரர் போல இருக்கும் கெட்டப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#dhanush sir #DNS #D51 movie shooting in my city #tirupati 💥 pic.twitter.com/FYwWlcvAxY
— Jayanth Jackson (@JayanthJackson0) January 30, 2024