LATEST NEWS
ஒரு நாளைக்கு 7 முறை சாப்பிட்டாலும் தனுசுக்கு ஒரு கிராம் கூட வெயிட் ஏறாது… உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.
பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக திடீரென அறிவித்தனர். இவர்களின் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் தனுஷ் நடித்த ஹிந்தி திரைப்படமான ஷமிதாப் படத்தை இயக்கிய R வாழ்க்கை தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்று தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தனுஷ் தற்போது 40 வயதானாலும் பார்க்க ஸ்கூல் பையன் போல தான் இருக்கின்றார். அவர் ஒரு நாளைக்கு ஏழு முறை சாப்பிட்டாலும் அவருக்கு ஒரு கிராம் கூட எடை கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.