CINEMA
எத்தனை கஷ்டம் வந்தாலும்…. பூர்வீக வீட்டை மட்டும் விக்காதீங்க…. நடிகர் சசிகுமார் வேண்டுகோள்..!!!

குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தை ராஜுமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார். அடுத்ததாக ‘நந்தன்’ படம் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரபல தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த நடிகர் சசிகுமார் தன்னுடைய சொந்த ஊர், வீடு குறித்து பேசியுள்ளார். அதில், நாங்க பல வருஷமா கூட்டுக்குடும்பமா வாழறோம். எதனை சண்டை, சச்சரவுகள் வந்தாலும் ஒருவரையொருவர் ஒருவர் விட்டுக்கொடுக்காமல், பகிர்ந்து சாப்பிட்டு இன்னமும் வாழ்கிறோம்.
அடுத்த தலைமுறை எப்படி இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதுமே நம்முடைய பூர்வீக வீட்டை மட்டும் எத்தனை தலைமுறை ஆனாலும், எத்தனை கஷ்டங்கள் ஆனாலும் விற்கவே கூடாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த வீடு அவர்களின் ஆன்மா நிற்கும் என்று பேசியுள்ளார்.