ஏன் இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க.. நாங்க அப்படி நினைக்கல.. சமூகத்தால் வரும் பிரச்சனை குறித்து மனம் திறந்த நடிகர் சாந்தனு .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏன் இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க.. நாங்க அப்படி நினைக்கல.. சமூகத்தால் வரும் பிரச்சனை குறித்து மனம் திறந்த நடிகர் சாந்தனு ..

Published

on

திரை பிரபலங்கள் பலரும் தனது சந்ததிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன; இந்த வரிசையில் இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை 1998 ஆம் ஆண்டு வேட்டியை மடிச்சு கட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தினார்.

இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் சித்து  +2, அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு போன்ற பல படங்களில் நடித்து வந்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியான “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது.

Advertisement


நடிகர் சாந்தனு தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சுமார் 8 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தையை ஏதும் பிறக்கவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சாந்தனு மற்றும் கீர்த்தி குழந்தை இல்லாததால் சமூகத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில் அவர் நாங்கள் எந்த விசேஷ வீட்டிற்கு சென்றாலும் “குழந்தை இல்லையா குழந்தை இல்லையா” என்று எங்களை டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் இருவருமே இப்போது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் நாங்கள் குழந்தை வேண்டாம்  என்று எப்போதுமே  நினைத்ததே  இல்லை;  “எது எப்போது நடக்குமோ அது அப்போது கண்டிப்பாக நடக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement