LATEST NEWS
“உலக அழகி நான் தான்” பாடலில் நடித்த அழகி கார்த்திகா.. இப்போம் எப்படி இருக்காங்க தெரியுமா ..? லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ..

சமீப காலமாக தமிழ் சினிமாவில் நடித்த 90s மக்களின் ஃபேவரிட் நடிகைகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வரிசையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சினிமாவில் அதிக கிளாமர் இல்லாமல் நடித்து 90ஸ் மக்கள் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த “தூத்துக்குடி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் பிறப்பு மற்றும் நாளைய பொழுது உன்னோடு என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்த நிலையில் பிசியாக இருந்த நடிகை கார்த்திகா மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, வைதேகி, 365 காதல் கடிதங்கள், தைரியம் என்ற பல படங்களில் நடித்து சினி உலகையே கலக்கி வந்துள்ளார்.
இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் “உலக அழகி நான் தான்” என்ற பாடலின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். அதன் பின்னர், இவர் 2012 பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.