என்ன சொல்லுறீங்க.. நடிகர் விஜய் இனிமேல் சினிமால நடிக்க மாட்டாரா..! ஷாக்கான ரசிகர்கள் .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன சொல்லுறீங்க.. நடிகர் விஜய் இனிமேல் சினிமால நடிக்க மாட்டாரா..! ஷாக்கான ரசிகர்கள் ..

Published

on

நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள நிலையில் தான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி  ஒன்றை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான  அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் மற்றொரு தகவலையும் மக்களிடையே பதிய வைத்துள்ளார். அதாவது அரசியல் “எனக்கு பொழுதுபோக்கு அல்ல அது என் ஆழமான வேட்கை” அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படத்தில்  நடிப்பதாகவும்  அதற்கான பணிகளை படக்குழு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், என் கட்சி வேலைக்கு எந்த ஒரு இடையூறும்  இல்லாத வகையில் முழுமையாக முடித்துவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலில் ஈடுபடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தை முடித்தவுடன்  தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக நான் விலகப் போகிறேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” திரைப்படத்தில்  நடிகர் விஜய் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் மற்றொரு படத்திற்கும்
ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

அதாவது, தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி  என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 69வது திரைப்படம் உருவாக உள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக நிறுவனம்  திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement