LATEST NEWS
கார், வீடு என்ற சொகுசு வாழ்கை.. தற்போது வறுமையில் புலம்பும் விஜய் டிவி மணிமேகலை .. கைவிட்டதா விஜய் டிவி ..?

சின்னத்திரையில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்து, தன்னுடைய கலகலப்பான பேச்சாலும், அழகாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மணிமேகலை. சில திரைப்படத்திலும் இவர் நடித்த நிலையில், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் சின்னத்திரையில் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
இவர் ஹுசேன் என்பவரை காதலித்த நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஃபினான்சியல் ரீதியாக கஷ்டப்பட்டு வந்த மணிமேகலைக்கு கைகொடுத்து தூக்கி விட்டது விஜய் டிவி தான்.அதாவது, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் கலந்துகொண்ட மணிமேகலை நடன திறமையை வெளிப்படுத்தி இரண்டாவது பரிசை தட்டி சென்றார்.
இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.இதனாலே மணிமேகலை மக்களிடத்தில் மேலும் பிரபலமடைந்தார். இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களிலும் கோமாளியாக வந்த மணிமேகலை திடீர் என கடந்த சீசனில், இனி நான் கோமாளியாக வர போவதில்லை என அறிவித்தார்.
இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? என பலர் கேள்விகளையும் எழுப்பினார். மேலும், தன்னுடைய யூடியூப் பக்கத்தின் மூலம் நன்கு கல்லா கட்டி வந்த மணிமேகலை கார், வீடு என சென்னையில் செட்டிலாகி விட்டார்.
தற்போது அவருடைய கிராமத்தில் பிரமாண்ட வீடு ஒன்றையும் கட்டி வருகிறார். சமீப காலமாக இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் யூடியூப் மூலமும் சரியாக வருமானம் இல்லாமல் போனது. தற்போது தன்னுடைய வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியாத சூழலில் இருப்பதாக, மணிமேகலை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மணிமேகலையின் இந்த நிலையை கண்டு, ரசிகர்கள் பலர் உங்களை விஜய் டிவி கை விட்டுவிட்டதா? என கேள்வி எழுப்புவதோடு தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.