GALLERY
பிகில் பாண்டியம்மா அழகா இருக்காங்களே..! கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்தம்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
பிரபல நடிகர் ஆன ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலம் ஆனார்.
அதன் பிறகு அவர் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகு அவர்களுக்கு சிறு சிறு வேடங்களில் தான் கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து தனுஷின் மாரி படத்தில் ரோபோ சங்கர் தனுஷின் நண்பராக நடித்தார்.
இதனை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் என அடுத்தடுத்த படங்களில் ரோபோ சங்கர் நடித்தார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமன் கார்த்திக் என்பவருக்கும் நேற்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்திரஜா பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதேபோல கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் படத்திலும் இந்திரஜா அதிதி சங்கரின் தோழியாக நடித்துள்ளார்.
அவரும் திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்திரஜா கார்த்திக் ஆகியோரின் நிச்சயதார்த்த விழாவில் நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.