ஒரு நியாயம் வேண்டாம்டா.. இறந்து விட்டதாக ஏப்ரல் ஃபூல் செய்த பாலிவுட் நடிகை பூனம் .. இதற்கு தான் செய்தேன் என்று விளக்கமளித்த வீடியோ வைரல் .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு நியாயம் வேண்டாம்டா.. இறந்து விட்டதாக ஏப்ரல் ஃபூல் செய்த பாலிவுட் நடிகை பூனம் .. இதற்கு தான் செய்தேன் என்று விளக்கமளித்த வீடியோ வைரல் ..

Published

on

பாலிவுட் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வந்தவர் நடிகை பூனம் பாண்டே; இவர் நேற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என்ற செய்தியை  அதிகாரப்பூர்வமாக அவரது மேலாளர் அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்றும்; அவர் நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறக்கவில்லை; அது பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தவே இறந்துவிட்டேன் என்ற செய்தியை பரப்ப சொன்னதாகவும்  வீடியோவில் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள பூனம் பாண்டே “ உங்கள் அனைவருடனும் முக்கியமான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் நான் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னை கொல்லவில்லை, ஆனால் இது ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரை பறித்துள்ளது என்பது தான் சோகமான விஷயம். இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் பலர் இறந்துள்ளனர்.

Advertisement

மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது முற்றிலும் தடுக்கக்கூடியது, HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகள் அதற்கு மிகவும் முக்கியம். இந்த நோயால் யாரும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. எனவே விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் வலுப்படுத்துவோம், மேலும் ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்.

இந்த நோயின் அழிவுகரமான தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்போம்.” என்று கூறியுள்ளார்.  32 வயதான பூனம் பாண்டேவின் மரண செய்தி நேற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், இன்று தான் உயிருடன் இருப்பதாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

அது மட்டுமில்லாமல்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினாலும், அதற்கு மரணத்தை போலியாக அறிவிப்பதா என்றும் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement