மது, புகை என பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை அமலாபால்…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மது, புகை என பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை அமலாபால்…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையை அனுபவித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த அமலா பால், இறுதியாக கடாவர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இதனிடையே நேற்று முன்திரம் நடைபெற்ற கத்தார் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காண தனது நண்பர்களுடன் அமலா பால் சென்றுள்ளார். அங்கு போட்டி முடிவடைந்த உடன் ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். மது மற்றும் புக என அங்கு எடுத்த பார்ட்டி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amala Paul இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@amalapaul)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in