LATEST NEWS
ஜோதிகா படத்தை தயாரிக்கும் சூர்யா- ஃபரஸ்ட் லுக் போஸ்டர் இதோ வெளியான செய்தி

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளர் ,சமூக சிந்தனையாளர் போன்ற பல்வேறு சிறந்த படைப்புக்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் நடிகர் சூர்யா.
இவர் சினிமா மட்டுமின்றி அகரம் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் பல மாணவர்களின் வாழ்வில் கனவுகளை நீநைவாக்கி வருகிறார் . இவரின் 2D என்டர்டைன்மெண்ட் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் பல திரைப்படங்களும் உருவாகியுள்ளன. இதை தொடர்ந்து அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் பொன்மகள் வந்தால்.
இத்திரைப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடிக்க உள்ள இந்த படத்தை ஜே ஜே ப்டரிக் எனும் டைரக்டர் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் ரசிகர்களை பேரின்பத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
இந்த போஸ்ட் ஆனது அதிக பார்வையாளர்களை கடந்து இப்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.