VIDEOS
பிரபுதேவாவுக்காக மதம் மாறிய நடிகை நயன்தாரா… இப்போ எந்த மதத்தில் இருக்காரு?… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த வருடம் இறுதியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனிடையே கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இவர் முதலில் டான்ஸ் மாஸ்டர் ஆன பிரபுதேவாவை காதல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த போது இந்து மதத்திற்கு மாறினார்.
ஆனால் சில காரணங்களால் இவர்களின் காதல் பிரிந்து விட்ட நிலையில் மீண்டும் தேவாலயம் மற்றும் கிறிஸ்துவ வழிபாடு என இருந்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதால் மீண்டும் இந்துவாக மதம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் சேயார் பாலு பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க