CINEMA
எல்லா நடிகைகளுமே அட்ஜெஸ்ட்மென்ட் செஞ்சவங்களா…? ஹேமா கமிட்டியால் கொந்தளித்த நடிகை பார்வதி…!!!
மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அருகே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தத. இது தொடர்பாக நடிகைகள் புகார் கொடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சர்ச்சையில் ஒட்டுமொத்த மலையாள சினிமா துறையை தவறாக எல்லாரும் பேசுகிறார்கள் என்று நடிகை பார்வதி கொந்தளித்துள்ளார்.
இந்த சர்ச்சை பற்றி பேசிய அவர், எல்லா நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் தான் என்ற மன நிலையில் பேசுகிறார்கள். மேலும் தான் கடந்த ஆறு ஏழு வருடங்களாக இது பற்றி குரல் கொடுத்து வருவதால் தனக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் யாரும் தருவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நடிகை பார்வதி சமீபத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.