TRENDING
ஒருவேளை அப்படியா இருக்குமோ…? அஜர்பைஜானில் நடிகை பிரியா பவானி ஷங்கர்…! அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைகிறாரா…?
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதைத் தொடர்ந்து அவர் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிகையாக அறிமுகமானார்.
இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோலிவுட்டில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கைவசம், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படம் என எண்ணற்ற படங்கள் உள்ளன. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இவர் தற்பொழுது அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங்கும் அங்கு தான் நடைபெற்று வருகிறது. எனவே ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை பவானி ஷங்கர் இணைகிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.