LATEST NEWS
அந்த வீடியோ 47 லட்சம், வீட்டில் வைத்து பலமுறை டார்ச்சர்… தற்கொலை தான் செய்ய வேண்டும்.. கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்..!

ஹிந்தி சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராக்கி சாவந்த். இவர் தமிழிலும் என் சகியே, முத்திரை மற்றும் கம்பீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில் ஆதில் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு மாதத்தில் அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்த நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் ஆதில் கைது செய்யப்பட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆதில் அளித்த பேட்டியில், ராக்கி சாவந்தை நான் அடிக்கவில்லை. அவர்தான் என்னை அடித்து துன்புறுத்தினார். என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டினார் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராக்கி சாவந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆதில் என்னுடைய நிர்வாண வீடியோக்களை 47 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். நான் குளியலறையில் இருந்த போது மறைமுகமாக நின்று வீடியோ எடுத்துள்ளார்.
என் முழு நிர்வாண கோலத்தையும் அப்படியே வீடியோவாக செல்போனில் எடுத்துள்ளார். இதனை 47 லட்சத்திற்கு அவர் விற்று உள்ளார். அது மட்டுமல்லாமல் என்னை வீட்டில் வைத்து பலமுறை அவர் பலாத்காரம் செய்தார். என்னுடைய முகத்தை எப்படி இந்த உலகிற்கு காட்ட முடியும்? உலகம் முழுவதும் என்னை நிர்வாணமாக பார்த்தால் நான் எங்கே செல்ல முடியும்? விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்று கலங்கியபடி அவர் பேசியுள்ள நிலையில் தற்போது இது பரபரப்பை கிளப்பியுள்ளது.