LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடித்த ஒரே படம் இதுதான்… என்ன படம்னு நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஷாலினி. என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயினியாக நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளமே உள்ளது.
முதல் முதலில் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அஜித்துடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் ஒன்றாக நடித்துள்ளார்.
இதனிடையே அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க கூடாது என்று இருந்தார். ஆனால் 1999 ஆம் ஆண்டு நடித்த நிறம் என்ற மலையாள திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்த போது அதில் ஷாலினி நடிக்க வேண்டும் என்று கேட்டனர்.
அதனால் பிரியாத வரம் வேண்டும் என்ற திரைப்படத்தில் ஷாலினி நடித்தார். பிரசாந்த் ஹீரோவாக நடித்த அந்த திரைப்படத்தில் ஷாலினி இறுதியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.