LATEST NEWS
பிரபல நடிகருடன் போர்வையை போர்த்திக்கொண்டு… ரொமான்ஸ் செய்த நடிகை வாணி போஜன்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த வாணி போஜன் அவருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில் அதற்கு வாணி போஜன் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் நடிகர் பரத்துடன் இணைந்து வாணி போஜன் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். ஆம் லவ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. பாரத் மற்றும் வாணி போஜன் இருவரும் போர்வையை போர்த்திக் கொண்டு ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.