LATEST NEWS
புதிய வீட்டை கட்டி முடித்த விஜய் டிவி “என்னம்மா ராமர்”…. கிரகப்பிரவேசம் விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்…. வைரல் புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் காமெடி மூலமாக உள்ளே நுழைந்து இன்று சினிமாவில் நடிக்கும் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் தான் ராமர். இவர் காமெடிக்கு மயங்காத ஆளே கிடையாது. விஜய் டிவியில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எந்த அளவிற்கு இவர் காமெடியில் கலக்கி வருகிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். அதிலும் குறிப்பாக என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் வைரலானதற்கு இவரே முக்கிய காரணம். டிவி மட்டுமல்லாமல் தற்போது ராமர் பல திரைப்படங்களிலும் சிறிய காமெடி ரோல்களில் நடித்து வருகின்றார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ராமர் சொந்தமாக ஒரு புதிய வீட்டை தற்போது கட்டி முடித்துள்ளார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதாவது நடிகர் ரோபோ சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
