LATEST NEWS
12 கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்… தங்கை ஸ்ரீதேவி குறித்து ரகசியத்தை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார்.
இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வனிதா, என்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஸ்ரீஹரி நிச்சயமாக சினிமாவிற்கு தான் வருவார்கள். நான் காதலை பிரித்து விடுவேன் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் இதுவரை 12 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளேன்.
ஒருமுறை காதலர் தினத்திற்கு ஐ லவ் யூ என்று எழுதி கிரீட்டிங் கார்டு அம்மாவுக்கு கொடுத்தேன். ஆனால் நான் அதை அம்மாவுக்கு வாங்கவில்லை. நான் காதலித்த ஒருவருக்காக வாங்கி அம்மா அதனை பார்த்ததால் மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவருக்காக வாங்கினேன் என்று பொய் சொல்லி தப்பித்து விட்டேன். என் அம்மா மஞ்சுளா என்னையும் என்னுடைய தங்கை ப்ரீத்தாவையும் தான் அடித்து வளர்த்தார்கள்.
இரண்டாவது தங்கை ஸ்ரீதேவியை எப்பவும் அடித்தது கிடையாது. ஏனென்றால் ஸ்ரீதேவி சிறுவயதில் மிகவும் கோபப்படுவார். கோபத்தில் ரூமுக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டு கையில் கிடைப்பதை உடைத்து விடுவாள். சிறுவயதிலிருந்தே அவள் சரியான பிராடு, நல்லா டிராமா போட்டு எல்லோரையும் ஏமாற்றி விடுவாள். அதனாலயே அவளை யாருமே அடிக்க மாட்டாங்க என்று வனிதா தன்னுடைய தங்கை ஸ்ரீதேவி பற்றிய ரகசியத்தை முதன் முறையாக கூறியுள்ளார்.