LATEST NEWS
இப்போ யாரும் நைட்ல என் வீட்டு கதவை தட்ட மாட்டாங்க… வருத்தத்துடன் வனிதா விஜயகுமார் பகிர்ந்த தகவல்..!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இதனைத் தொடர்ந்து பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அடுத்தடுத்து மூன்று முறை திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய இவர் அனைத்து திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
சினிமாவிற்கு பிரேக் கொடுத்துவிட்டு தற்போது சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் வனிதா அவருடைய மகளுடன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் பழகிய விதத்தை மகிழ்ச்சியாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவரின் அம்மாவை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்த வனிதா, என்னுடைய அம்மா நைட்ல வந்து கதவை தட்டு வாங்க, என்ன பண்ற? என கேட்பாங்க. அப்போது நான் கடுப்பாகி கத்துவேன். பிறகு இரவு வேளையில் கால் செய்து என்ன பண்றேன்னு கேட்பாங்க, அப்போ நைட்ல என்ன பண்ணுவாங்க தூங்குறேன் என கூறிவிட்டு காலை கட் செய்தேன்.
ஆனால் இப்போது தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். யாரும் இல்லை என்னை எழுப்புவதற்கு என உருக்கமாக பேசியுள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் வனிதா உங்கள் அம்மா உங்களுடன் தான் இருக்காங்க என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.