LATEST NEWS
வாலி படத்தை பார்த்து மெய்மறந்த பிரபலம்….! அவருடன் நடிக்க இப்போது வரை ஏங்கும் நடிகர்…..!!!
தமிழ் சினிமாவில் முன்னாள் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் ரசிகர்களால் செல்லமாக தாளா என்று அழைக்கப்பட்டு வந்தவர், தற்போது ஏகே என்று அழைத்து வருகின்றனர். தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்ட இவர் லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரைடிங் செய்து வந்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது .அஜித்தை ஒருமுறையாவது சந்தித்து விடமாட்டோமா என்று பல ரசிகர்கள் ஏங்குவது உண்டு, ஆனால் இங்கு ஒரு நடிகர் அவருடன் ஒரு தடவை அவது நடித்துவிட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
அவர்தான் ஒய். ஜி. மகேந்திரன் 80ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் பல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் அஜித் உடன் நடிக்க இயங்கியதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது இவர் நடித்த வாலி படத்தை பார்த்த பிறகு ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று ஏங்கியதாக கூறினார். மேலும் இது தொடர்பாக அவரிடம் பலமுறை கேட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
