CINEMA
என் படிப்பு இவ்வளவுதான்… “அப்பாவுக்கு செய்த சத்தியத்தை காப்பாத்தணும்” அக்ஷரா ஹாசன் பகிர்ந்த தகவல்…!!

உலகத் திரையுலகின் நாயகனாக உலக நாயகனாக போற்றப்படுபவர் கமல்ஹாசன். ஏராளமான படங்களில் நடித்து பிரபல நடிகராக விளங்கும் கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஒருவர் ஸ்ருதிஹாசன் மற்றொருவர் அக்ஷரா ஹாசன்.
ஸ்ருதிஹாசன் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேபோன்று அக்ஷரா ஹாசனும் சில படங்களில் நடித்துள்ளார். அக்ஷரா ஹாசன் அஜித் நடித்து வெளியான விவேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அவர் பேட்டி ஒன்றில் தனது தந்தைக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் பற்றி பகிர்ந்திருந்தார். அதாவது சிறு வயது முதலே படிப்பின் மீது அக்ஷரா ஹாசனுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வையே அக்ஷரா ஹாசன் இரண்டு முறை எழுதியதாகவும் இருந்தும் தன்னால் பாஸ் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் தனது தந்தை வருத்தப்படுவார் என்று நினைத்த அக்ஷரா கமலஹாசன் அவர்களிடம் சென்று நிச்சயமாக நான் வீட்டில் சோம்பேறியாக அமர்ந்திருக்க மாட்டேன். எனக்கு பிடித்த பாதையில் பயணிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதன் பிறகு சிங்கப்பூருக்கு சென்ற அக்ஷரா தேர்வு ஒன்று எழுதி தனக்கு பிடித்த நடன பள்ளியில் சேர்ந்தார்.
ஆனால் அதிலும் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை ஒரு நடனம் ஆடும் போது சுவற்றில் மோதி அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதன் பிறகு நடனத்தில் இருந்தும் விலகிக் கொண்டார். ஆனாலும் தனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அக்ஷரா பாலிவுட்டில் களமிறங்கினார்.
விவேகத்தை தொடர்ந்து தான் அக்ஷரா பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக தான் திரை உலகில் களம் இறங்கியதாக அக்ஷரா ஹாசன் பகிர்ந்துள்ளார்.