LATEST NEWS
புது சீரியலில் களமிறங்கும் ஆல்யா மானசா…. ஹீரோ யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…. இதோ நீங்களே பாருங்க….!!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.
மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார். சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே புதிய தொடரில் கமிட் ஆகி இருப்பதாக ஆலியா மனசா தெரிவித்த நிலையில் அது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது புதிய சீரியலுக்கான படபிடிப்பை ஆலியா மானசா தொடங்கியுள்ளார். சரிகம புரொடக்ஷன் தயாரிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ஆலியா மானசா நடிக்க உள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் அண்மையில் வெளியான நிலையில் ஆலியா மானசாவுடன் இணைந்து நடிக்க விஜய் டிவி சீரியல் நடிகர் ஒருவர் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். அதாவது விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஹீரோவாக நடித்தவர் தான் தற்போது ஆலியா மானசாவுடன் இணைந்து சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
