“நான் எதிர்பார்க்காத ஒன்று என் வாழ்க்கையில் நடந்து விட்டது”…. மனம் வருந்தி பதிவு போட்ட ஆல்யா மானசா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் எதிர்பார்க்காத ஒன்று என் வாழ்க்கையில் நடந்து விட்டது”…. மனம் வருந்தி பதிவு போட்ட ஆல்யா மானசா….!!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் புதிய சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதாவது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடிக்கின்றார். அந்த சீரியல் அண்மையில் தான் தொடங்கியது.  இந்நிலையில் சமீபத்தில் காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டபடி ஒரு வீடியோவை ஆலியா மானசா பதிவிட்டு இருந்தார். அதில், நான் எதிர்பார்க்காத ஒன்று என் வாழ்க்கையில் நடந்து விட்டது. எனக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். என்னால் நடக்க முடியவில்லை. இந்த விபத்தால் தான் என் கணவர் என்னை அதிகமாக அன்பு செய்கிறார் என புரிந்து கொள்ள முடிந்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in