LATEST NEWS
“எல்லாமே கேடி பசங்க”… குட் நைட் அனு மாதிரி பொண்ணு கேட்ட இளைஞர்களை வச்சு செஞ்ச அனிதா சம்பத்… வைரல் பதிவு..!!

தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார்.
இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த அனிதா சம்பத் தற்போது திரைப்படங்களில் நடிகையாக கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குட்நைட் திரைப்படத்தின் ஹீரோயின் அனுபோல தான் மனைவி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் அதிகம் பேசி வருகின்றனர். அதனைப் பற்றி அனிதா சம்பத் கமாண்ட் செய்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதாவது குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு நினைக்கிறவங்க அம்புட்டு பயலும் கேடி பசங்க, நான் என்ன பேசினாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம நாம சொல்றதை மட்டும் மூடிட்டு கேக்குற பொண்ணு வேணும் என சொல்வதற்கு பதிலாக, ஷார்ட்டாக அனு மாதிரி பொண்ணு வேணும்னு சொல்றாங்க என்று அனிதா சம்பத் விமர்சித்த இந்த பதிவை பகிர்ந்து உள்ளார்.