LATEST NEWS
அன்னபூரணியால் வெடித்த சர்ச்சை.. Netflix எடுத்த திடீர் முடிவு.. இது என்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பு, குடும்பம், குழந்தைகள், பட தயாரிப்பு என அனைத்திலும் நயன்தாரா ஆர்வம் காட்டி வருகிறார்.
அண்மையில் அழகு சாதன நிறுவனம் மற்றும் பெமி 9 ஆகிய புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து தொழில் முனைவோராக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். இறுதியாக நயன்தாரா நடிப்பில் உருவான படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரைடல் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.
இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி நயன்தாரா படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு கலவையான விமர்சனங்களும் வந்தது. இந்நிலையில் இந்துக்களுக்கு எதிராக அன்னபூரணி படம் எடுக்கப்பட்டதாகவும், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாகவும் விமர்சனம் எழுந்தது.
மேலும் பிராமின் பெண் அசைவத்தை விரும்புவதும், பிரியாணி உணவை நமாஸ் செய்து தயாரிக்கும் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எனவே அன்னபூரணி திரைப்படத்தை நீக்க கோரியும், அந்த படத்தை ஒளிபரப்பு செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை தடை செய்ய கோரியும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் netflix நிறுவனம் அதிரடியாக அன்னபூரணி திரைப்படத்தை ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டது.