34 வயது நடிகையை திருமணம் செய்ய போகும் பசங்க பட நடிகர்…. அவர் யார் தெரியுமா?…. ரசிகர்கள் ஷாக்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

34 வயது நடிகையை திருமணம் செய்ய போகும் பசங்க பட நடிகர்…. அவர் யார் தெரியுமா?…. ரசிகர்கள் ஷாக்….!!!!

Published

on

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடித்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அண்மையில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துரோகி மற்றும் கோலி சோடா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து கிஷோர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ப்ரீத்தி நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளர் மற்றும் மாடல் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் லட்சுமி வந்தாச்சு மற்றும் பிரியமானவள் போன்ற பல சீரியல்களிலும் நடித்த இவருக்கு தற்போது 34 வயது ஆகின்றது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிஷோர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

Advertisement

அதாவது தன்னைவிட நான்கு வயது மூத்தவரான பிரீத்தியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்,அடுத்த வருடம் நமது பிறந்த நாட்கள் கணவன் மனைவியாக கொண்டாடுவோம் என்று அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kishore Shanthi Dhinakaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ksd_offl)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in