CINEMA
ரஜினியை சீண்டிய தாடி பாலாஜி…. கோபத்தின் உச்சிக்கே சென்ற ரஜினி ரசிகர்கள்..!!!

நடிகர் தாடி பாலாஜி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினியை, காமெடி நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி சீண்டிய சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தடி பாலாஜி, “TVK தலைவர் விஜய் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவரை ஈஸியா சந்திக்கலாம்.
ஆனால் ரஜினியோடு படம் நடிக்கும்போது மட்டுமே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன்பிறகு அவரைப் பார்க்கவே முடியாது என்றார். இந்த வீடியோ வைரலான நிலையில், தாடி பாலாஜியை ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.