Uncategorized
பிட்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யும் முதியவர்…!! என்ன உதவி என்று தெரியுமா …???? பலப்பள்ளிகள் அவரை தேடுகிறது…
பிட்சை எடுத்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனசு உள்ள ஒரு முதியவர். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் புல்பாண்டி என்ற பாண்டி (66). இவரது மனைவி இறந்த பிறகு இவர் 1979-ம் ஆண்டு மும்பை சென்று அங்கு இருக்கும் ஒரு கோவிலில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். பிறகு 2000-ம் ஆண்டு தமிழ்நாடு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து பிட்சை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் அதில் இருந்து வரும் பணத்தை தனக்கு என கொஞ்சம் செலவு செய்துகொண்டு மீதுள்ள பணத்தை மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் எதாவது பொருட்கள் வாங்கி அதனை பள்ளிகளுக்கு தானமாக கொடுப்பார் பாண்டி . அப்படி அவர் நெல்லை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு உதவி செய்து உள்ளார்.மேலும் அவர் இதுபோன்று இத்தனை காலமாக சில பள்ளிகளுக்கு உதவி செய்து வருகிறார் .
பாண்டி தற்போது ஆரல்வாய்மொழி அருகே தோவாளை, வீரநாராயணமங்கலம், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் வழங்கினார். இதுபோல் அவர் இதுவரை தற்பொழுது 3 பள்ளிகளுக்கு அவர் குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் வழங்கினார். பிட்சை எடுத்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்துவரும் இந்த முதியவர் பண்டியைப்போல் இதுவரை யாரும் இல்லை என்று அவருக்கு பள்ளியில் ஒரு விழா அமைத்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
