அய்யோ கொடுமையே..! யாருமே கவனிக்கலையா..? 2 நாட்களாகச் சாலையிலேயே கிடந்த சடலத்தின் மீது ஏறி இறங்கியே வாகனங்கள்.. உடை, செருப்பைக் கண்டு கதறிய மகன்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே..! யாருமே கவனிக்கலையா..? 2 நாட்களாகச் சாலையிலேயே கிடந்த சடலத்தின் மீது ஏறி இறங்கியே வாகனங்கள்.. உடை, செருப்பைக் கண்டு கதறிய மகன்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், ஜான்சி-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜக்மோகன் திவாரி (56) என்ற நபர் கடந்த அக்டோபர் 9 அன்று தனது வயலுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது உடல் நெடுஞ்சாலையிலேயே சுமார் இரண்டு நாட்களாகக் கிடந்ததாகவும், அதன் மீது பல வாகனங்கள் ஏறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சாலைப் பணிகள் நடைபெற்று வந்ததே இந்தச் சோகச் சம்பவத்திற்குக் முக்கியக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால், அப்பகுதியில் வழியாகச் சென்றவர்கள் யாரும் சாலையோரம் உயிரிழந்த கிடந்த உடலைக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், உயிரிழந்தவரின் மகன் ஆயுஷ்யா, அங்கிருந்த தனது தந்தையின் உடைகள் மற்றும் செருப்புகளைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அவரது உடலை அடையாளம் கண்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சோகச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இது தொடர்பாக மேற்கொண்டு தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in