LATEST NEWS
மாமன்னன் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன்.
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மாமன்னன் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வடிவேலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மாமன்னர் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.
தற்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
