“மாணவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..” அம்பை அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய்யின் அதிரடி விசிட்..! குழந்தைகள் தினத்தில் காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாணவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..” அம்பை அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய்யின் அதிரடி விசிட்..! குழந்தைகள் தினத்தில் காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்..!!

Published

on

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14-ந்தேதியாகும். ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

குழந்தைகள் தினத்தையொட்டி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘கேக்’ வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழக அரசு டெண்டரும் வெளியிட்டிருந்த நிலையில், பிரிட்டானியா, எலைட் நேச்சுரல்ஸ், ஐ.டி.சி, கிரீம் கேக் ஆகிய 4 நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.9.27 கோடி செலவில் மாணவர்களுக்கு 45 கிராம் எடையுடைய ஸ்பாஞ்ச் கேக் துண்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் வரும் நவம்பர் 14-ந்தேதி அன்று முதலமைச்சர் விஜய் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்கு செல்கிறார். குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் கேக் வழங்கி கொண்டாட முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். இதேபோல், முதலமைச்சர் விஜய் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு செல்ல உள்ளார். நவம்பர் 3-ந்தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு விழாவில் பங்கேற்க உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in