படப்பிடிப்பு தளத்திற்கு சென்று….. அர்னவை கைது செய்த போலீசார்….. அதிரடி சம்பவம்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

படப்பிடிப்பு தளத்திற்கு சென்று….. அர்னவை கைது செய்த போலீசார்….. அதிரடி சம்பவம்….!!!

Published

on

சின்னத்திரை நடிகர் அர்னவ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகரான அர்னவ் கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது. அந்த தொடரில் அவருடன் நடித்து வந்த நடிகை திவ்யாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அவருடன் நடிக்கும் கதாநாயகி உடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ்  தாக்கியதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் மகளிர் போலீசார், அர்னவ்  மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை, உள்ளிட்ட  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் அர்னவை  விசாரணைக்கு ஆஜராகும் படி கூறியும் அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார். இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சமன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் விசாரணையில் ஆஜராக அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளார்.

கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் பதினெட்டாம் தேதி ஆஜராவதாக வக்கீல் தரப்பில் மனு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அர்னவ்  படபிடிப்பு தளத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் அர்னவை  கைது செய்துள்ளனர். அவரை சிறையில் அடைக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு ஆஜரானால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள், என்ற அச்சத்தில் தான் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in